தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த விலக்கு வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
கொரோனா பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளும் வரை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்த விலக்கு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

msme enterprises demand moroatorium, msme enterprises demand excemption to pay loand due, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கி கடன் தவணை செலுத்த விலக்கு கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், chennai high court, reserve bank of india, rbi,msme department, chennai high court news,
கொரோனா பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளும் வரை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்த விலக்கு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு, மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோழிப்பண்ணை தொழில் நடத்தி வரும் கோவர்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ஊரடங்கு முடியும் வரை, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்த விலக்களிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
Advertisment
Advertisements
பிற துறைகளைப் போல, வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது எனவும், உற்பத்திக்கு தொழிலாளர்கள் தேவை எனவும், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்க, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news