சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்திற்கு இடையே மக்களின் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ளதால், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சில சிறிய பேருந்துகளை அந்த இணைப்பில் இயக்க திட்டமிட்டுள்ளது.
மாவட்ட தலைமையகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள்/ ரயில் நிலையங்களுடன் கிராமப்புற / தொலைதூரப் பகுதிகளுக்கு இடையே இணைப்பை கொண்டுவர, டிப்போக்களில் பெரிதாக பயன்படாத பேருந்துகளை மட்டுமே பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பெருநகர போக்குவரத்து கழகம் கூறியது.
72 வழித்தடங்களில் 146 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவதால், சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதியிலும் திட்டமிடப்பட்ட சிறிய பேருந்து சேவைகளை பாதிக்காது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பெருநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில், நிதி இழப்பு அல்லது ஓட்டுநர் பற்றாக்குறையை ஒதுக்கி வைத்து, சிறிய பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகமான விழுப்புரத்திற்கு இந்த மாற்றம் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், இங்கு மினிபஸ் திட்டத்தை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வுக்காக தலைமைச் செயலர் வி.இறை அன்புவிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil