அடையாறு டிப்போ அருகே எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் திடீரென புகை கிளம்பி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் வேகமாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரி செல்லக்கூடிய மாநகரப் பேருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) பயணிகளை ஏற்றிக்கொண்டு அடையாறு டிப்போ அருகே எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் கியர் பாக்ஸில் இருந்து திடீரென புகை கிளம்பியதைப் பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை வேகமாக இறக்கிவிட்டார். சில நொடிகளிலேயே மாநகரப் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
வாகனப் போக்குவரத்து மிகுந்த பரபரப்பான அடையாறு சாலையில் பேருந்து தீ விபத்துக்குள்ளானதையடுத்து, உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மாநகரப் பேருந்து தீ பிடிக்கத் தொடங்கிய மாநகரப் பேருந்தில் இருந்து, விரைவாக பயணிகள் வேகமாக வெளியேறியதால் பயணிகள் யாரும் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
அடையாறு டிப்போ அருகே மாநகரப் பேருந்து தீ விபத்துக்குள்ளான தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“