/indian-express-tamil/media/media_files/2025/02/10/0qJ0MrQDGt6cTWfSvFyO.jpg)
பயணிகள் பல ஆண்டுகளாகச் சந்தித்து வரும் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள் விரைவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கபட உள்ளது. தற்போது பயணிகள் சுமார் 1 கி.மீ தூரம் நடந்து கனமான பொருட்களை இழுத்துச் சென்று பேருந்துகளை அணுகும் நிலை உள்ளது.
பயணிகள், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு பதிலளித்த எம்.டி.சி நிர்வாக இயக்குனர் டி.பிரபுசங்கர், கோரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார். "பயணிகளின் கோரிக்கையை அறிந்துள்ளோம், முடிந்தவரை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க பேருந்துகளை அனுமதிக்க உள்ளோம்" என்று அவர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன், வண்டலூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் விமான நிலையத்தை இணைக்கும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, எம்.டி.சி. எஸ் 69, குன்றத்தூர் மற்றும் எஸ் 100, தாம்பரம் கிழக்கு வழித்தடங்களில் மெட்ரோ ஃபீடர் சேவைகளை (சிறிய பேருந்துகள்) இயக்குகிறது. 80 பயணிகள் வரை ஒரு பேருந்தில் செல்லலாம்.
இந்திய விமான நிலைய ஆணைய (ஏஏஐ) அதிகாரிகள், எம்.டி.சி பேருந்துகளை விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பேருந்து திரும்புவதற்கான இடம் (அ) புதிய பயணங்களைத் தொடங்க பேருந்துகளை நிறுத்துவது போன்ற அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
முன்னதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடுவிடம் இந்த பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி சுதா,பொது போக்குவரத்து விருப்பங்கள் இல்லாததால் பயணிகள் விலையுயர்ந்த டாக்சி சேவையை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார். "இது நீண்ட காலமாக ஒரு கோரிக்கையாக உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்குவது போல, சென்னை விமான நிலையத்திலும் மலிவு விலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும் என்றிருந்தார்.
குறைந்தபட்சம் ஒரு பேருந்து நிறுத்துமிடத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. விமான நிலையத்திற்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளுக்கான பயணச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்று எம்.பி. சுதா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.