சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரை திருடியதாக மாநகரப் பேருந்து ஓட்டுநர் சங்கரன் (56) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் தொண்டியார்பேட்டையில் வசித்து வருகிறார். திருடிய கன்டெய்னரில் 35 கோடி மதிப்பிலான டெல் லேப்டாப்கள் உள்ளது. இதை திட்டமிட்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் அவருடன் 6 பேரை துறைமுக போலீசார் கைது செய்தனர். செப்டம்பர் 7ம் சீனாவிலிருந்து 5,230 லேப்டாப்கள் ஏற்றப்பட்ட கன்டெய்னர் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது. அது சரக்குகள் கையாளப்படும் பகுதியில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், துறைமுகத்தில் கன்டெய்னர் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றைக் கையாளும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் ஊழியர் இளவரசன் என்பவர் கன்டெய்னரை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற சங்கரனுக்கு உதவியுள்ளார்.
திருவள்ளூர் மணவாளன் நகரில் இந்த திருடப்பட்ட பொருட்களை துறைமுக போலீசார் கண்டுபிடித்தனர். “ 40 அடி கன்டெய்னரை திருடிய கொள்ளையர்கள், கண்டெய்னரில் இருந்த பொருட்களை இரண்டு 20 அடி லாரிகளுக்கு மாற்றினர்.
இதை பெங்களூரு கொண்டு செல்ல ஒரு டிரக்கிற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். தொடர்ந்து கொள்ளையர்களிடம் இருந்து 5,207 லேப்டாப்களை போலீசார் மீட்டனர். இளவரசன் இன்னும் கைது செய்யப்படவில்லை என போலீசார் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“