இப்படியொரு வாய்ப்பா? கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம்

இதற்குத் தகுதியானவர்கள், முதலில் ஒரு மாத காலத்திற்குக் குரோம்பேட்டையிலுள்ள MTC பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்வார்கள்.

By: September 18, 2020, 7:46:39 PM

கார் ஓட்ட கற்றுக்கொள்ள நினைக்கும் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அரசு நிறுவனமான மெட்ரோபொலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (Metropolitan Transport Corporation – MTC). ஆம், மிகவும் குறைந்த கட்டணத்தில், பொதுமக்களுக்காக கார் ஓட்டுநர் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது MTC.

இதற்குத் தகுதியானவர்கள், முதலில் ஒரு மாத காலத்திற்குக் குரோம்பேட்டையிலுள்ள MTC பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்வார்கள். வெற்று மைதானம், பாலங்கள், எட்டு வடிவ தடங்கள் மற்றும் பின்னோக்குப் பயிற்சி உள்ளிட்ட பயன்முறையில் வாகனம் ஓட்டுவதுபற்றிய அடிப்படை பாடங்கள் குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி பள்ளியில் சொல்லித்தரப்படும். பிறகு அவர்களுக்குப் போக்குவரத்தில் எப்படி வாகனம் ஓட்டுவது என்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கான கட்டணமாக ஒரு நபருக்கு சுமார் 7,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் கற்பவரின் உரிமம் (LLR) மற்றும் ஓட்டுநர் உரிம விண்ணப்பக் கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கார் ஓட்டுநர் வகுப்புகள் நடத்தப்படும். ஒரு நபர் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். பெண்களுக்குப் பெண் பயிற்சியாளர்களால் வகுப்புகள் எடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044-29535177 அல்லது 9445030597 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mtc starts car driving classes for public

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X