பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கத்தில் சாலையோரம் காணப்பட்ட ஒரு வயது முதிர்ந்த சதுப்புநில முதலையை, வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையைக் கடப்பதைக் கண்டறிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, தமிழக வனவிலங்கு அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Mugger crocodile found on Chennai roadside rescued
அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 11.30 மணியளவில் வழிப்போக்கர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததும் அவர்கள் 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து, முதலையைப் பிடித்து கிண்டியில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு வந்தனர்.
“முதலையானது ஆறடி உயரம் கொண்ட முதிர்ந்த உயிரினம். எங்கள் அதிகாரிகள் அதன் இயக்கத்தை கண்காணித்து வந்தனர்... அதன் பாலினத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. முதலைக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதிப்போம். மேலும், மற்ற முதலைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் என்பதால் அதை உடனடியாக அந்த பகுதிக்குள் விடப் போவதில்லை. இந்த முதலை சிறிது காலம் கண்காணிப்பில் இருக்கும்” என்று தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் indianexpress.com இடம் கூறினார்.
இந்த வகையான முதலைகள் சதுப்பு நிலங்கள், ஏரிகள் மற்றும் செயற்கைக் குளங்களில் காணப்படுவதாகவும், வெயிலில் காய்வதற்கு நீர்நிலைகளில் இருந்து வெளிவருவதாகவும், ஆனால் அவை மிகவும் அரிதாகவே சாலைகள் அல்லது தொடர்ச்சியான பொது நடமாட்டம் உள்ள பகுதிகளில் காணப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
மிக்ஜாம் புயலால் கடந்த வாரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் போது, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலை பகுதியில் முதலை காணப்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் முதலையைக் கண்டதும் தனது வாகனத்தை நிறுத்துவதைப் பார்த்து, பின்னால் காரில் வந்த நபர் ஒருவர் இந்தச் சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, இதனையடுத்து சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, சென்னை நகரின் பல நீர்நிலைகளில் சில சதுப்புநில முதலைகள் இருக்கிறது. மழை காரணமாக குறிப்பிட்ட முதலை வெளியே வந்தது. முதலையை யாரும் தூண்டாவிட்டால் எந்த தீங்கும் இல்லை, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“