முகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு! மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கே வந்து அழைப்பு விடுத்துள்ள முகேஷ் அம்பானி

By: February 12, 2019, 10:13:14 AM

இந்தியாவியன் நம்பர்.1 பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி, தனது மகனின் திருமண அழைப்பிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினார்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேத்தா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முகேஷ் அம்பானி அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நேற்று சென்றனர்.

மு.க.ஸ்டாலின் அம்பானியை வரவேற்றார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது, மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலினிடம் முகேஷ் அம்பானி வழங்கினார்.

ஆகாஷ் அம்பானி – ஷோல்கா மேத்தா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். தொழிலதிபர் ரசல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள் தான் ஷோல்கா மேதா.

இதன்பிறகு, முகேஷ் அம்பானிக்கு கலைஞர் எழுதிய ‘தாய்’ புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தகது.

மகனின் திருமண அழைப்பிதழை வழங்குவதாக இருந்தாலும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஸ்டாலின் வீட்டுக்கே வந்து முகேஷ் அம்பானி பத்திரிகை வைத்து மும்பை அழைத்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mukesh ambani met mk stalin akash ambani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X