scorecardresearch

மகள் திருமணத்திற்காக ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி வருகையை அடுத்து கோவிலில் கூட்டம் அலை மோதியது

மகள் திருமணத்திற்காக ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி
மகள் திருமணத்திற்காக ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபா் ஆனந்த் பிரமலுக்கும் வரும் டிசம்பர் 12ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.

இவா்களது நிச்சயதாா்த்தம் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 3 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. முதல் திருமணப் பத்திாிகையை மும்பையில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் வைத்து அம்பானி குடும்பத்தினா் வழிபாடு நடத்தினா்.

இதனையொட்டி திருமணத்திற்கான அழைப்பிதழை நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சமர்ப்பித்து வருகிறார் முகேஷ் அம்பானி.

இதன் தொடா்ச்சியாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு இன்று காலை மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்தார் முகேஷ் அம்பானி. அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

முகேஷ் அம்பானி வருகையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதியது. தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தாா்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mukesh ambani offers prayers at tamil nadus rameswaram temple