மதுரை மாநகராட்சியில் கடைகளின் முன் கட்டாயமாக கொடி வைக்க வேண்டும் என அதிகாரிகள் மிரட்டுவதாக கடைகாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்த சுதந்திர தினத்தை மேலும் சிறப்பாகும் பொருட்டு இந்திய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 13 தேதி முதல் 15 தேதி வரை அனைவரும் வீடுகளில் கொடிகளை ஏற்றி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு கடையின் முன்பு கொடியேற்ற வேண்டும் என்றும். இந்த கொடிகளை மாலை நேரங்களில் கழட்டி வைக்க வேண்டியதில்லை என்றும் ஒவ்வொரு கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சொல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் அடுத்து ஒரு பெண் வந்து ஒவ்வொரு கடைகளிளும் பத்து ரூபாய் கூட விலைமதிப்பில்லாத ஒரு கொடியை கொடுத்து இருபது ரூபாய் கொடுக்க வேண்டும் என வசூல் செய்ததாக கூறப்படுகிறது.ஆனாலும் பலர் இதை வாங்கவில்லை என்றும், ஒரு சிலர் காசு இல்லை கடைசியல் முதலாளி இல்லை என கூறியுள்ளனர்.
அப்போது ஒரு கடைக்காரர் பணம் வசூலித்த பெண்ணிடம் " இப்போது என்னிடம் பணமில்லை பிறகு வாங்கிக் கொள்கிறேன் " என கூறியுள்ளார். அதற்கு நீங்கள் இதை இப்போது வாங்கவில்லை என்றால் விஏஓ வருவார், அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என மிரட்டல் தொணியில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பிறகு அந்த கடைக்காரர் பணம் இல்லையென்று கெஞ்சி கேட்ட பிறகு, நீங்கள் தேவை இல்லாமல் பேசுகிறீர்கள் கொடியை வாங்கிக்கொண்டு நாளைக்கு பணம் கொடுங்கள் என்றுகூறிவிட்டு அந்த பெண் சென்றுள்ளார்.
மதுரையில் மாநகராட்சி சார்பில் இப்படி வசூலிக்க சொல்லி ஏதேனும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் வட மாநிலத்தில் தேசிய கொடியை ரூ.25 கொடுத்து வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் தரப்படும் என்று செய்தி வெளியாகிய நிலையில், தற்போது மதுரையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“