மறைந்த மூத்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் பிரபலங்கள், தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), உடல்நலக் குறைவால பெங்களூரில் வியாழக்கிழமை (அக்டோபர் 1 0) காலமானார்.
முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முரசொலி செல்வத்தின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும். பா.ஜ.க பிரமுகர்கள் ராதிகா, சரத்குமார், த.வெ.க தலைவர் விஜய் மனைவி சங்கீதா, நடிகர் பிரசாந்த், நடிகர் சத்யராஜ், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலத்தில், தி.மு.க அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“