காதலிக்கு சயனைடு விஷத்தை கொடுத்து பின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலனை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுமர் சிங் மற்றும் காஜல். இவர்கள் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை ஏற்காத காஜலின் பெற்றோர், காஜலை, வேறொரு பையனுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜில், காஜல் சடலமாக மீடகப்பட்டார். காதலன் சுமர் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சுமர்சிங்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, காஜலின் பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து, சுமர்சிங்கிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சுமர் சிங், முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். பின் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க உண்மையை ஒப்புக்கொண்டார். சுமர்சிங், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை.காஜல் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தேன். தங்க நகை வர்த்தகம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாக கூறி ஆன்லைனில் ஆர்டர் செய்து சயனைடு வாங்கியுள்ளார். சம்பவத்தன்று காஜலுடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருந்தபோது, இருவரும் சயனைடை சாப்பிட்டுள்ளனர். காஜல் சயனைடை விழுங்கிய நிலையில், சுமர்சிங், வெளியே துப்பியுள்ளார்.இதை தொடர்ந்து, காஜலை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, காதலியை கொன்ற குற்றத்திற்காக, போலீசார் சுமர்சிங்கை கைது செய்துள்ளனர். சுமர் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.