மதுரையில் பயங்கரம் : திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை

Madurai murder : மதுரையில் டீக்கடைக்காரரை இளைஞர்கள் கத்தியால் குத்தி கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்திருப்பது மதுரை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

By: August 22, 2019, 3:08:35 PM

மதுரையில் டீக்கடைக்காரரை இளைஞர்கள் கத்தியால் குத்தி கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்திருப்பது மதுரை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரையில் திமுக பிரமுகர் ராஜா அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம். இவர் நேற்றிரவு (ஆகஸ்ட் 21ம் தேதி) ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் அதிர்ந்து போன ராஜா, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் விடவில்லை. ராஜாவை சுற்றி வளைத்து கொண்டு எந்த பக்கமும் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார்.

தகவல் அறிந்தது கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. ஒருவேளை, இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் 4 பேரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Murder in madurai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X