கோவையில் குற்ற வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராக வந்த ஒருவரை வெட்டி கொன்ற குற்றவாளிகளை மேட்டுப்பாளையம் கோத்திகிரி சாலையில் இருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.
கோவை கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில் வழக்கில் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

இன்னிலையில் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக கத்தியால் சரமாறி வெட்டி கொன்றனர். அப்போது, தடுக்க வந்த கோகுலின் நண்பர் மனோஜையும் வெட்டினர். இதில் மனோஜ் பலத்த காயமடைந்தார். கோகுலை வெட்டி கொன்ற இந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில், இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இன்று தீவிர வாகன சோதனை நடத்தினர். கொலை நடந்த இடத்திற்கு வந்த நபர்களில் ஒருவரின் செல்போன் எண்ணின் சிக்னல் அங்கு கிடைத்ததைத் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டது. ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 7 பேர் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரியில் இருந்து அந்த 7 குற்றவாளிகளையும் கோவை மாநகர காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வரும் வழியில், ஜோஸ்வா மற்றும் கௌதம் என்ற 2 குற்றவாளிகள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் அருகில் தங்களுக்கு வாந்தி வருவதாக கூறி இறங்கிய நிலையில் இருவரும் தப்பிச்செல்ல முயன்று உள்ளனர்.
அப்போது இவர்களை விரட்டிச் சென்ற யூசப் என்ற கோவை காவலரை முன்கூட்டியே ஓரிடத்தில் பதிக்கி வைத்திருந்த அருவாளை எடுத்து தாக்கியுள்ளனர். இதில் காவலர் யூசப்பிற்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர், அந்த இரண்டு குற்றவாளிகளையும் காவலர் யூசப் துப்பாக்கியால் காலில் சுட்டதால் பிடிப்பட்டனர்.
இதையடுத்து, காவலர் யூசப்பிற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அந்த இரண்டு குற்றவாளிகளுக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்படி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”