பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற தொடங்கியது. மேலும், எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பழனி மலைக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்கள், அடிவாரத்தில் உள்ள கோவில்கள் என்று அனைத்திற்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு, பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததை அடுத்து, இன்று கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எட்டு கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில், இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.
பழனி மலை அடிவார சன்னதிகள், கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட உப கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.