சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுப்படிகள் நடந்தன.
இதனால் டிக்கெட் எடுத்தும் குடும்பமாக வந்தவர்களும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் தங்களுக்க பாலியல் தொல்லை இருந்ததாகவும் பெண்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். நானே பலிகிடா ஆகிறேன்” என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பாக பேசிய இசையமைப்பாளரும், இசையமைப்பாளர் சங்கத் தலைவருமான தீனா, “இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்தான் பொறுப்பு. நிகழ்ச்சிக்கு எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பன போன்ற எந்தத் திட்டமிடலும் அவர்களிடத்தில் இல்லை. இதனால்தான் இந்தக் குழப்பம் கூச்சல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கான்வாய்க்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் இது ஒரு ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.
இந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அவர் தமிழர்களை ஏமாற்றிவிட்டார் எனறுதான் சொல்வேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் டாய்லெட் மற்றும் தண்ணீர் வசதி அவசியம். ஆனால் இதெல்லாம் அங்கு இல்லை.
கிட்டத்தட்ட ரூ.20 கோடி வரை வசூலாகி உள்ளது. ஆக, இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, “ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு சம்பந்தம் இல்லை; அது எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். இது பொறுப்பற்ற பேச்சு. இதுபோன்ற பேச்சுகள் கூடாது. ரசிகர்கள் அவரை நம்பிதான் வந்தார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“