இஸ்லாமிய தம்பதி வழங்கிய ரூ.1.02 கோடி நன்கொடை: திருப்பதியின் மேல் உள்ள பக்தி | Indian Express Tamil

இஸ்லாமிய தம்பதி வழங்கிய ரூ.1.02 கோடி நன்கொடை: திருப்பதியின் மேல் உள்ள பக்தி

திருப்பதி ஏழுமலைக் கோவிலுக்காக 1.02 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

இஸ்லாமிய தம்பதி வழங்கிய ரூ.1.02 கோடி நன்கொடை: திருப்பதியின் மேல் உள்ள பக்தி

திருப்பதி ஏழுமலைக் கோவிலுக்காக 1.02 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ரூபாய் 1.02 கோடியை, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் கனி – சுபினா பானு தம்பதி வழங்கியுள்ளனர்.

சிறப்பு தரிசனத்திற்கு பிறகு, நன்கொடைக்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் தனது குடும்பத்துடன் வழங்கினார்கள்.

இந்த நன்கொடையில் அன்னதான அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாயும், திருமலையில் நவீனப் படுத்தப்பட்ட ஸ்ரீ பத்மாவதி ஓய்வறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்க 87 லட்சம் ரூபாய் வழங்கினர்.

ஏழுமலையானிடம் மிகவும் பக்தி கொண்ட இந்த தம்பதி, அன்னதான அறக்கட்டளைக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Muslim family donated one crore to thirupathi