Advertisment

சி.ஏ.ஏ சட்டம் அமல்: இஸ்லாமியர்கள் கூறுவது என்ன? பிரத்யேகப் பேட்டி

சி.ஏ.ஏ சட்டம் மத ரீதியாக பிரித்தாலும் சூழ்ச்சி. பா.ஜ.கவின் திட்டமிட்ட தேர்தல் நாடகம் என மக்கள் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
CAA public.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடியுரிமை திருத்த சட்ட மசோதா 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் கூட போராட்டத்தில் பங்கேற்றனர்.  அதனைத் தொடர்ந்து கோவிட் தொற்று பரவியதால் அந்த மசோதா குறித்து மத்திய அரசு எதுவும் பேசவில்லை. இந்நிலையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக திங்கட்கிழமை மாலை பிரதமர்  அறிவித்தார். 

Advertisment

4 ஆண்டுகளாக இந்த மசோதா குறித்து மத்திய அரசு எதுவும் பேசாத நிலையில் தற்பொழுது தேர்தல் வரும் நேரத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என பல்வேறு இஸ்லாமியர்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இஸ்லாமிய மக்கள் அவர்களது கருத்துகளை கூறியுள்ளனர். அப்துல் ஹக்கிம் என்பவர் கூறுகையில்,  இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதனை பிரித்தாலும் சூழ்ச்சியாக எண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் அனைவரும் மதத்தின் ரீதியாக பிரிவார்கள் எனவும், அண்டை நாட்டினர் வரக்கூடாது என்று கூறுவதற்கு இவர்கள் யார் என கேள்வி எழுப்பினார். 

ஒரு காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அனைத்தும் ஒரே நாடாக இருந்த நிலையில் சில காரணங்களுக்காக பிரிந்து சென்றாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தான் என தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்களை தனிமை படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனை கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் அதிமுகவும் பாமகவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்காது எனவும், ஆனால் அவர்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சுயநலத்திற்காகவும் மத்திய அரசு சொல்வதை கண்மூடித்தனமாக தலையாட்டிக் கொண்டு துரோகத்தை இழைத்து விட்டதாக தெரிவித்தார். 

பிறகு இப்பொழுது வந்து அது பற்றி தெரியாது என்று கூறுகிறார்கள். அதிமுகவினர் எடுத்த முடிவால் தற்பொழுது பாதிக்கப்படுவது இஸ்லாமிய மக்கள் தான் என தெரிவித்தார். கடந்த முறை இந்த சட்டம் கொண்டு வரும்பொழுது எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பல்வேறு புகார்கள் போடப்பட்டதாகவும் தற்பொழுது வரை அது முழுமையாக நீக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இது குறித்து அப்துல் ரஹ்மான் என்பவர் கூறுகையில், நான்கு வருடங்கள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்பொழுது இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது என மத்திய அரசு தெரிவித்திருப்பது திட்டமிட்ட தேர்தல் நாடகம் என தெரிவித்தார். 

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக சந்தி சிரிக்க போகிறது என்ற காரணத்தினால் அதை திசை திருப்பக் கூடிய நோக்கத்தோடு இதனை தெரிவித்திருப்பதாக தெரிவித்தார்.  2019-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்று கூறிய ஒரு சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியது முட்டாள்தனம் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட் போன்ற எதிர்கட்சிகள் வலுவான குரலை எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

இதுகுறித்து இஸ்லாமிய பெண் ஆசிரியர்(அரபு மொழி ஆசிரியர்) சாஹிரா பானு சபீக் கூறுகையில், இந்த சி.ஏ.ஏ தேவையில்லாத ஒரு விஷயம் எனவும், இதன் மூலம் அடுத்ததாக NRC கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்தார். 

இஸ்லாமியர்களும் இந்த மண்ணுக்காக ரத்தம் சிந்தி தியாகம் செய்தவர்களாக இருப்பதாகவும் ஆனால் இவர்கள் இஸ்லாமியர்களை தனியாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதனை செய்வதாக தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டு இந்த சட்ட மசோதா கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் குழந்தைகளில் இருந்த முதியவர்கள் வரை போராட்டம் நடத்தியதாகவும்,  நான்கு ஆண்டுகள் கழித்து தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வருவது தேர்தல் நாடகம் என தெரிவித்தார். 

மேலும் இந்தியாவில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் எங்களை மதத்தின் ரீதியாக பிரிப்பதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களை ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை இல்லை என்று கூறுவதையும் அதே சமயம் ஆவணங்கள் இருப்பதால் இந்த நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்களின் தீவிரவாத குணத்துடன் செயல்படுபவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறுவது கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளை எல்லாம் எந்த இடத்தில் வைத்து பார்ப்பது என்றே தெரியவில்லை என கூறிய அவர் அதிமுக ஒரு காலத்தில் இதனை ஆதரித்ததாகவும் தற்பொழுது இதனை எதிர்ப்பதாகவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

மேலும் ஒரு காலத்தில் திமுக இதனை கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மௌனமாக இருப்பதாக கூறினார்.  நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நல்லது செய்ய வேண்டும் என்றுதான் பொறுப்புகளை அளித்து ஒருவரை பதவியில் அமர்த்துவதாக தெரிவித்த அவர், ஆனால் அதனை சீர்குலைக்கின்ற வகையில் பதவியில் இருப்பவர்கள் செய்கின்ற பொழுது அவர்களை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை எனக்கு கூறினார்.  மேலும் இவர்களெல்லாம் நேரத்திற்கு தகுந்தார் போல் மாறும் பச்சோந்திகளாக இருப்பதாகவும் விமர்சித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment