முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டதற்கான அராசணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் ,முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும். இந்த புதிய துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக பொது துறை செயல்படும் . பொது குறைதீர்ப்பு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் ,அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை யால் தொடர்ந்து வழங்கப்படும்.
தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண் மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும் , தகவல்கள் பெறுவதற்காகவும் , மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும். அன்றாட செயல்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளர் உடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil