scorecardresearch

சட்டப்பேரவையில் இயற்றிய மசோதாவுக்கு மதிப்பளிப்பது ஆளுனரின் கடமை.. முத்தரசன்

பேரவையில் இயற்றிய மசோதாவுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஆளுனரின் கடமை.

Mutharasan said there was no need to make the Karunanidhi pen memorial a controversy
இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவையை அவமதிக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு ஆளுனர் ஆர்.என். ரவி கூடாது எனப் பேசினார். தொடர்ந்து முத்தரசன் பேசுகையில், “ஆளுனர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிக்கிறார்.

மேலும் அரசியலமைப்பு சட்டம், சமூக நீதிக்கு எதிராக பேசுகிறார். தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கிறார். இது தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுத்த பேரவை.
இந்தப் பேரவையில் இயற்றிய மசோதாவுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஆளுனரின் கடமை. ஆனால் அவர் மதிப்பளிப்பது கிடையாது, மாறாக அலட்சியப்படுத்துகிறார்” என்று விமர்சித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mutharasan said duty of the governor to respect the bill passed by the assembly