scorecardresearch

கருணாநிதி பேனா நினைவிட சர்ச்சை தேவையற்றது.. முத்தரசன்

கருணாநிதிக்கு கடலில் பேனா சிலையை சர்ச்சையாக்குவது அவசியமற்றது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Mutharasan said there was no need to make the Karunanidhi pen memorial a controversy
இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்.

கோவையில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் கூறுகையில், “ முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் பிரச்னைகளில் இடதுசாரிகளும் மௌனம் காப்பதாக விமர்சிப்பதற்கு தார்மீனம் பலம், உரிமை இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன பிறகு இன்னொரு கட்சிக்கு அவர் அடிமையாக செயல்பட்டு வருவதாகவும் சட்டமன்றத்தில் அண்ணா பெயரை ஆளுநர் விட்டதை தவறு என்று சொல்லக்கூட முடியாத நிலையில் உள்ளாதாகவும், மத்திய நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற விவசாயிகளுக்கான மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்துக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டதற்கு கூட பேச மறுப்பதாகவும் சுட்டிக்காட்டி, அவர் தங்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்று சாடினார்.

ரூபாய் 3000 கோடி மதிப்பில் மறைந்த உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் சிலை நிறுவியபோது யாரும் வாய்த்திருக்கவில்லை.
ஏனெனில் உயர்ந்த குலத்தில் பிறந்தவர் உயர்ந்த செல்வாக்கு உடையவராக இருந்தவர் என்கிற காரணத்தினால் கருத்து கூறவில்லையா என்று கேள்வி எழுப்பியவர்

கருணாநிதி எளிய குடும்பத்தில் குக்கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை பிறந்து கடுமையான உழைப்பால் முன்னேறியவர் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் கருணாநிதி என்பவரால் பேனா விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுவதாகவும்

கலைஞர் பேனாவால் அரசியல் மூலமாகவும், கட்சி மூலமாகவும் சீர்த்திருத்தம், சாதனை செய்துள்ளதாகவும் அவருக்கு பேனா பெரும் பங்களிப்பை செய்துள்ளதால் அவருக்கு அடையாளமாக கடலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதை சர்ச்சையாக்குவது அவசியமில்லை என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து என்று இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mutharasan said there was no need to make the karunanidhi pen memorial a controversy