பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவையொட்டி, முக்கிய தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்னில் இன்று நடைபெறும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு தேர்வர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமசந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, சக்கர பாணி, பழனிவேல் தியாகராஜன், கிதா ஜீவன் பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதுபோல பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, வைகோ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.
பசும்பொன்னில், கூடும் கூட்டத்தை கண்காணிக்க நவீன ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் 5 டிஐஜிக்கள், 25 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 12,000 போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/oy4e9WWyoPogPSSU3Lb2.jpg)
இந்நிலையில் பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“