/indian-express-tamil/media/media_files/2025/10/26/cp-radhakrishnan-3-2025-10-26-12-19-49.jpg)
அக்டோபர் 30-ம் தேதி காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். Photograph: (Image Source: x/ @CPR_VP)
ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்​றும் 118-வது ஜெயந்தி விழா நடை​பெற உள்​ளது. அக்டோபர் 30-ம் தேதி அரசு சார்​பில் நடை​பெறும் விழா​வில் காலை 9 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்று மரி​யாதை செலுத்த உள்​ளனர்.
இதைத் தொடர்ந்​து, காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்று மரி​யாதை செலுத்த உள்​ளார்.
தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​திய பிறகு, தேவர் வாழ்ந்த வீட்​டைப் பார்​வை​யிடு​வதுடன், தேவர் நினை​வாலய அறங்​காவலர் காந்​தி​மீ​னாள் நடராஜனை சந்​தித்து நலம் விசா​ரிக்க உள்​ளார். குடியரசு துணைத் தலை​வருடன் மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பா.ஜ.க மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு மரி​யாதை செலுத்த உள்​ளனர்.
குடியரசு துணைத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு பசும்​பொன்​னில் உள்ள ஹெலிபேட் தளத்தை புதுப்​பிக்​க​வும், விரிவுபடுத்​த​வும் மாவட்ட நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இந்​நிலை​யில், பாது​காப்பு முன்​னேற்​பாடு​கள் குறித்து மாவட்ட ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன் தலை​மை​யில் நேற்று (25.10.2025) ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் மற்​றும் பல்​வேறு துறை அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us