தி.மு கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது சகாக்கள் மற்றும் பிற தலைவர்களுடன் பகிரங்க நட்பு பாராட்டுகிறார்.
அண்மையில் இவர் கேரளா சென்றிருந்தபோது, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை என் அன்பான தோழர் என அழைத்தார். ராகுல் காந்தியை என் சகோதரன் என கூப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைக்க வைத்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் மற்ற தலைவர்களுடன் தனித்து காணப்படுகிறார்.
2021 பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்தார். மேலும், ராகுல் காந்தியுடன் பேசும்போது சில நேரங்களில் சார் என்ற அழைப்பதுண்டு.. அதனை ராகுல் திருத்தினார். சகோதரா என்று அழையுங்கள் என்றார். என் தம்பி ராகுல்” என்றார் மு.க. ஸ்டாலின்.
இது குறித்து திமுக மூத்தத் தலைவர் ஒருவர் பேசுகையில், “மற்ற தலைவர்களையும் தொலைதூர இரத்த உறவுகளைப் போல் நடத்துவதில் மு.க. ஸ்டாலின் நாட்டம் கொள்கிறார்.
தன் மாநிலத்தை விட சிறிய மாநிலமாக இருந்த போதிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் மரியாதை செலுத்துகிறார்.
பினராய் விஜயன், பிரதமர் நரேந்திர மோடி என மற்ற தலைவர்களையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரை அறிமுகப்படுத்துகிறார்” என்றார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது ஆச்சரியமாக இருந்தது.
ஒரு முதல்வர், இன்னொரு மாநில பள்ளிகளை பார்வையிடுவதா என நினைத்தேன். அவர் எங்கள் பள்ளிகளில் உள்ள சிறப்புகளை தமிழ்நாட்டில் தொடங்குவதாக கூறினார். அடுத்த 6 மாதத்தில் அதற்கான விழாவிலும் நான் கலந்துகொள்வேன்” என்றார்.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் அன்பு பாராட்டியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அப்போது தாம் பாஜகவுடன் சிந்தாந்த ரீதியாக சிறு சமரசம் கூட செய்துகொள்ள மாட்டேன் என்றார். மேலும், அந்த விழாவில் மேடையில் இருந்த தொல். திருமாவளவனை கைகாட்டி கவலைப்பட தேவையில்லை என்றார்.
மேலும், நான் உங்கள் சகோதரன். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்கள் இந்த ஸ்டாலினால் ஒருபோதும் சமரசம் செய்யப்பட மாட்டாது” என்றார்.
மேலும் மு.க. ஸ்டாலின் மறைந்த திராவிட தலைவரான சி.என். அண்ணாத்துரையிடமும் நெருங்கி பழகி அவர் அன்பை பெற்றார். சி.என். அண்ணாத்துரையின் அரசியல் வாரிசும் மு.க. ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியிடமும் அன்பை பெற்றவர்.
பொதுவாக சி.என். அண்ணாத்துரை யாரையும் பெயரையும் கூறி அழைப்பது கிடையாது. அன்பு தம்பி என்றே அழைப்பார். அந்த அண்ணாத்துரையின் குரல், எழுத்து ஆகியவற்றை அப்படியே பிரதிபலித்தவர் கருணாநிதி.
அந்த கருணாநிதி திமுக தொண்டர்களை உடன் பிறப்புகளே என்று அழைப்பார். திமுகவில் இருந்து பிரிந்து கட்சியினரால் சின்னவர் என்றும் தொண்டர்களால் புரட்சித் தலைவர் என்றும் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தனது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே என்றே அழைப்பார்.
திராவிட இயக்கத் தலைவர்களில் அவர் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார்.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஊடகம் மற்றும் தொடர்புத் துறை தலைவர் பேராசிரியர் ஜி ரவீந்திரன் பேசுகையில், “தமிழர்கள் எப்போதும் உணர்ச்சிவசமானவர்கள்.
சாதாரண மக்களுக்கும் தலைவர்களுக்கும் உறவு கிடையாது. ஆகவே உறவை வலுப்படுத்திக் கொள்ள அன்புத் தம்பிகளே, உடன் பிறப்புகளே, மச்சா, அண்ணி போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாகவே திருநெல்வேலி பக்கம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் அண்ணாச்சி.. அண்ணா என மரியாதையாக அழைப்பார்கள்” என்றார்.
கடந்த காலங்களில் அண்ணாத்துரைக்க அறிஞர், கருணாநிதிக்கு கலைஞர், எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், ஜெயலலிதாவுக்கு அம்மா என மக்கள் அடைமொழிகள் சூட்டினர்.
ஸ்டாலினின் முன்னோர்களும் இதேபோன்று பிற தலைவர்களுடன் நட்பு பாராட்டியுள்ளனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ், இந்திரா காந்தி மற்றும் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்டோரை கருணாநிதி அடிக்கடி தனது உரைகளில் நினைவு கூர்வார்.
அதேபோல் எம்ஜிஆரும் என்டிராமா ராவ்வும் நெருங்கிய நண்பர்கள். ஜெயலலிதாவும் ராஜிவ் காந்தியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் செப்.7ஆம் தேதி நாளை ராகுல் காந்தி பங்குபெறும் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை (கன்னியாகுமரி-காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்ரா) மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
இந்த யாத்திரையானது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராகுல் தனது பலத்தை நிரூபிக்க நடத்துகிறார். இந்த யாத்திரை தமிழ்நாட்டில் நடப்பது ராகுல் காந்திக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பாஜகவை திமுக எதிர்க்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும், காங்கிரஸிற்கு கூட்டணியில் அதிகபடியான எம்.பி.க்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
ஆகவே இது ராகுல் மற்றும் மு.க. ஸ்டாலினுக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர், “மு.க. ஸ்டாலின் தான் முதல் முதலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றார்.
இந்த யாத்திரை தொடர்பாக நாங்கள் அவரை அணுகியபோது தயக்கமின்றி உடனே ஒப்புக் கொண்டார். மு.க. ஸ்டாலின் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். மு.க. ஸ்டாலினின் பேச்சுகள் மக்களை இழுக்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.