Advertisment

'எதிர்மறை விமர்சனத்தால் மேலும் வளர்ந்துள்ளோம்': My V3 Ads உரிமையாளர் பேச்சு

தனது நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றதாகவும், அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை கொடுத்ததாகவும் My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
My V3 Ads SCAM Sakthi Anand press meet after Appearing Coimbatore City Economic offences wing Tamil News

'எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனம் மேலும் உயர்ந்துள்ளது' - My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

Coimbotore | My V3 Ads: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் My V3 Ads நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் ஆசை காட்டி மோசடி செய்தது, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாக கூறிக் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்-க்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தனது நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றதாகவும், அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தார். 

நேற்று காலை இதே நிறுவனம் வேறு பெயரில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், அவர்கள் புகார் அளித்த அந்த நிறுவனத்தில் தானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது அவர்கள் வந்து புகார் அளிப்பதற்கான நோக்கம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் My V3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் மேலும் பேசுகையில், "இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு, இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம். விளம்பரத் துறையும் வியாபார துறையும்  எத்தனை நாட்கள் இருக்குமோ, அவ்வளவு நாட்கள் எனது நிறுவனமும் இயங்கும். 

கோவை நீலாம்பூர் பகுதியில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை. அவர்களாகவே தன் எழுச்சியாக வந்தனர். அவர்களைத் நான் ஒழுங்கு மட்டுமே படுத்தினேன். அரசியல் பின்புலம் இல்லாமலேயே இத்தனை பேர் தன் எழுச்சியாக வந்தபோதே நான் ஜெயித்து விட்டேன். எனது பின்னால் எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லை. 

எங்கள் நிறுவனத்தின் பொருட்களை போலி என கூறுபவர்கள் அதனை நிரூபிக்கட்டும். அவை போலி என்றால் அதற்கான தர சான்றிதழ்களை அளித்தவர்கள் யார்?. எங்கள் நிறுவனத்தில் இருப்பதெல்லாம் இந்திய மருந்துகள். அதுவும் பாரம்பரிய மருந்துகள். இதனை விற்பதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. மக்கள் அவர்களாகவே விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். அந்த பொருட்கள் தயாரித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். 

திரைப்படத்திற்கு எப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால் அந்த திரைப்படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுமோ, அதுபோன்று எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனமும் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. யாரேனும் அனுமதி பெற்று தந்தால் அன்றைய தினம் கூடிய கூட்டத்தைப் போல் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை என்னால் கூட்ட முடியும். எங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருட்களை மட்டுமே வாங்கி உள்ளனர்" என்றும் அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment