Advertisment

ஒருநாள் போலீஸ் விசாரணை நிறைவு: மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்ட My V3 Ads சக்தி ஆனந்தன்

My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் ஒருநாள் விசாரணை நிறைவடைத்த நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
 My V3 Ads Shakti Anandan jailed after One day police  investigation completed Tamil News

My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

My V3 Ads | coimbotore: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த My V3 Ads என்ற நிறுவன உரிமையாளர் சக்தி் ஆனந்தன் குறித்து கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தன் மீதும், My V3 Ads நிறுவனம் மீதும் புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ம் தேதி போராட்டம் நடத்தினார். 

Advertisment

காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சக்தி ஆனந்தனை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இதே போல மற்றுமொரு வழக்கிலும் My V3 Ads நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுவை நேற்று விசாரித்த நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவண பாபு ஒரு நாள் மட்டும், சக்தி ஆனந்தனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 

இதனையடுத்து, சக்தி ஆனந்தனை தங்களது காவலில் எடுத்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சக்தி ஆனந்தனிடம் ஒருநாள் விசாரணை நிறைவடைத்த நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment