தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் பற்றி மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தினார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு நடந்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறுகையில், “மாணவர்களின் அறிவியல் முன்னேற்றத்திற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆண்டிற்கு 4-5 கோடி ரூபய் வரை ஒதுக்கப்படுகிறது.
மாணவர்களுக்காக கோடைக் கால பயிற்சி வழங்கப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயிற்சியில் குறைந்த அளவிலேயெ சேர்ந்து பயன் அடைகின்றனர்.
இனிவரும் காலங்களில் அதிக மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழக பள்ளி கல்வித்துறையிலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட, குலசேகப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2,200 ஏக்கர் நிலம் தேவையாக இருந்ததில் மாநில அரசு 1,850 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. ஏவுதளம் அமைப்பதற்கான மண்ணின் தரம் குறித்த ஆய்வு நடக்கிறது. விரைவில் ஆய்வு நடந்து பணிகள் துவங்கும்.
உலக அளவில் ஒப்பிடும்போது நம் நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் ஒரு சிலவற்றில் நாம் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.” என்று கூறினார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் பற்றி மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தினார்.
தற்போது வரை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் செயற்கைக்கோள்கள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இருந்து செயற்கைக்கோள்கள் ராக்கெட் மூலம் ஏவப்படுவதற்கு இடம் பார்க்கப்பட்டு அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.
குலசேகரப்பட்டினம், பூமத்தியரேகைக்கு அருகே இருப்பதால், ராக்கெட் மூலம் ஏவப்பட்டு செயற்கைக்கோள் விண்வெளியில் நிலை நிறுத்துவதற்கு குறைந்த அளவே எரிபொருள் செலவாகும். ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினத்தில் இருந்து செயற்கைக்கோள் ஏவப்படுவதற்கு குறைந்த அளவில் செலவாகும் என்பதால் அதிக அளவில் பல நாடுகளுக்கு இங்கே இருந்து செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலம் ஏவலாம் என்று விஞ்ஞானிகளின் திட்டமாக உள்ளது.
இந்த நிலையில்தான், மூத்த விஞ்ஞானி மயில் அண்ணாதுரை குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பணிகள் நடந்து வருவது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தினார்.
உலகின் நம்பர் 1 பணக்காரராக இடம்பிடித்துள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் 42000செயற்கை கோள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதைவிட அதிகமாகவும் விரைவாகவும் குலசேகரப்பட்டினத்தில் செயற்கை கோள்களை உருவாக்க முடியும் என்றும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குலசேகரப்பட்டனத்தில் உள்ளது. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் சுற்றியுள்ள பகுதிகளில் என்னென்ன தொழில் நிறுவனங்களை கொண்டு வரமுடியும். ராக்கெட் ஏவுதள உதிரி பாகங்கள் தயாரிக்க உள்ளூர் தொழில் நிறுவனங்களை பயிற்றுவிக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்தும், பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் குலசேகரப்படனம் ராக்கெட் ஏவுதளம் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சகள் குறித்தும் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதி ஆலோசனை செய்தார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் குறித்து மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“