Southern Railway | Tiruchirapalli | மைசூரு- சென்னை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 12ஆம் தேதி (இன்று) ரூ.89 ஆயிரம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய வந்தே பாரத் ரயில்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில் திருச்சி கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களில் விற்பனை கடைகள், மக்கள் மருந்தகம், குட்ஷெட்டுகள் உள்ளிட்டவை பயன்பாட்டுக்கு வருகின்றன.
தொடரந்து, “மைசூரு- சென்னை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் யூபிஐ மூலம் செலுத்தி பணம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்தப் பேட்டியின் போது, பேட்டியின் போது முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா் மற்றும் முதுநிலைக் கோட்ட தொலைத்தொடா்பு மேலாளா் இரப்பா பிருக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மைசூர் முதல் கடலூர் வரை உள்ள 449 கி.மீ தூரத்தை ரயில் கடக்கும் பயண நேரம் 9 மணி ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“