பெங்களூரு பட்டதாரி பெண் பாலியல் வழக்கு: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

Mysore gang rape five tamilnadu youths arrested one absconded Tamil News அவர்களை விடுவிக்க 3 லட்சம் பணம் கேட்டும் மிரட்டியிருக்கின்றனர்.

Mysore gang rape five tamilnadu youths arrested one absconded Tamil News
Mysore gang rape five tamilnadu youths arrested one absconded Tamil News

Mysore gang rape five tamilnadu youths arrested one absconded Tamil News : கர்னாடக மாநிலம் மைசூரில் எம்பிஏ மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 6 பேரில் 5 பேரை நான்கு நாட்களுக்குள் மைசூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, மிகவும் மோசமான வழக்கு கர்னாடக காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெங்களூரு உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் பிற்பகல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 வயதிற்குப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆறு பேரின் மீதும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் பதிவு செய்யவுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்த கும்பல், வழக்கமாக மைசூருக்கு வருகை தருவதாகவும், பின்னர் தனியாக வரும் பயணிகள், இளம் தம்பதிகள் மற்றும் பெண்களின் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த வரிசையில் குடிபோதையிலிருந்த இந்த கும்பலிடம் இம்முறை எம்பிஏ மாணவர்களான ஆண், பெண் இருவர் சிக்கியுள்ளனர். இந்த இளம் ஜோடியை ஒதுக்குப்புறமாகக் கூட்டிச் சென்ற கும்பல், ஆண் நண்பனை அடித்துத் துன்புறுத்திவிட்டு, பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களை விடுவிக்க 3 லட்சம் பணம் கேட்டும் மிரட்டியிருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த கும்பல் சாமராஜநகர் மாவட்டம் வழியாக சத்தியமங்கலம் திரும்பும் வழியில் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்தபிறகு லலிதாத்ரிநகர் (வடக்கு) பகுதிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் பார்ட்டி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 வயதான அந்தப் பெண், மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது சொந்த ஊரான மும்பைக்குச் சென்றுவிட்டார். மேலும், அவருடன் வந்த ஆண் நண்பர், புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இருவரும் டிஸ்சார்ஜ் செய்வதற்கு மருத்துவ ரீதியாகத் தகுதியானவர்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிசெய்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mysore gang rape five tamilnadu youths arrested one absconded tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com