கோவையில் MyV3 விளம்பர நிறுவனம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதன் உரிமையாளர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோரை அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
MyV3 விளம்பர நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும், My V3 விளம்பரங்களின் உரிமையாளர் சக்தி ஆனந்தனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ,My V3 விளம்பரங்களுக்கு ஆதரவாக 5 பேர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், பொது அமைதிக்கும் ,வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோவையைச் சேர்ந்த விநாயக மூர்த்தி, கணேசன், பிரவீன் அருள்மணி, சிவனந்த பெருமாள் ஆகியோர் எனத் தெரியவந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“