மை வி3 உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மை வி3 செயலி முடக்கப்பட்டுள்ளது.
கோவையில் வெள்ள கிணறு பகுதியில் மை வி3 நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் போலியாக மக்களை ஏமாற்றி, மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் புகாரை பதிவு செய்துகொண்ட காவல்துறைனர். அடுத்த வாரம் வருமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் காவல் ஆணையரை பார்த்த பிறகுதான் செல்வோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் பலமுறை இவர்களிடம் தெளிவுப்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மை வி3 ஆட்ஸ் செயலியும் முடக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சக்தி ஆனந்த் இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“