இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தைய முரளிதரனின் 800 படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமானபோது, எழுந்த விமர்சனங்கள் முடிந்துபோன நிலையில், இப்போது, அவர் தி ஃபேமிலி மேன் குழுவினருடன் இணைந்ததால் நாம் தமிழர் கட்சியினர் விஜய்சேதுபதியை நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி தனித்து கதாநாயகனாக மட்டுமல்லாமல், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் தயக்கமின்றி நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதோடு, சமூக அரசியல் விஷயங்கள் குறித்து ஒரு கலைஞன் என்ற முறையில் கருத்து தெரிவித்து வருகிறார்.
2020ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பதற்கு நடிகர் விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது. ஆனால், முரளிதரன் இலங்கை தமிழர் பிரச்னைகளில் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசியதாகவும் அவருடய படத்தில் முரளிதன் நடிக்கக் கூடாது என்று தமிழகத்தில் இருந்து பல அரசியல் கட்சிகள் குரல் எழுப்பியது. அதில் நாம் தமிழர் கட்சியும் முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது. அதிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியது. அப்போது, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் அவரை தமிழர் துரோகி என்று கடுமையாக விமர்சித்தார்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் அரசியல் இயக்கங்களிடம் இருந்து எழுந்த கடுமையான எதிர்பால், படக்குழுவினரே விஜய்சேதுபதியை விடுவிப்பதாக அறிவித்தது. அதோடு, அந்த படமும் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கி ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இலங்கை தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளை தவறாக சித்தரிப்பதாக கடும் விமர்சனங்களும் எழுந்தன. சில அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான், தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர்கள் ராஜ் அண்ட் டிகே மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தங்களுடன் இணைந்துள்ளதாக தெரிவித்து விஜய்சேதுபதியுடன் சிரித்து பேசுவதாக அமைந்த ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டனர். இதன் மூலம் ராஜ் அண்ட் டிகே இயக்கும் அடுத்த வெப் சீரிஸில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
இலங்கை தமிழர்களை, விடுதலைப் புலிகளை தவறாக சித்தரித்த தி ஃபேமிலி மேன் 2 இயக்கிய இயக்குனர்களுடன் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வருகின்றன.
இது குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளைக் கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களைக் காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்டி முடிகிறது விஜய்சேதுபதி? வெட்கமின்றி 'மக்கள் செல்வன்' என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி!” என்று கடுமையக விமர்சித்துள்ளார்.
தி ஃபேமிலி மேன் குழுவினருடன் இணைந்துள்ளதால் நடிகர் விஜய்சேதுபதி மீது நாம் தமிழர் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது அரசியல் தளத்திலும் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"