ராஜீவ் நினைவிடத்தில் டிக்டாக்; நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி செய்த டிக்டாக் வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி செய்த டிக்டாக் வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
Advertisment
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர் நண்பர்களுடன் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று அங்கே டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்தபடி நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் செய்த டிக்டாக் வீடியோ ராஜீவ் காந்தியை அவதூறு செய்யும்படியாக உள்ளது. இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவி வைரலானதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்ச்சையை பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் டிக்டாக் செய்த நா.த.க நிர்வாகி துரைமுருகன் மீது புகார் அளித்துள்ளார். மேலும், அந்த புகாரில், துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக்டாக் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"