Naam Tamilar Katchi Kaliammal Tamil News: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் தி.மு.க-வை விமர்சித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி மது பாட்டில்களை வீசினர். இதில் சிலவற்றை நாம் தமிழர் கட்சியினர் கையில் எடுத்து காட்டினார். இந்த பாட்டில் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

இருப்பினும், பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறையினர் மது பாட்டில்களை வீசிவிட்டு ஓடி சென்ற, தி.மு.க-வை சேர்ந்த 2 பேரை பிடித்து கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டு பின்னர் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
😡திடிரென்று மதுபாட்டில்களை காளியம்மாள் அக்கா மீது வீசிய திமுக ரவுடிகள் 😡😡😡 😤😤 DMK rowdys attacks ntk women leader kaliammal is this democracy stalin? @timesnow @RepublicTVs @KaliammalNTK @WIONews @NewsTamilTV24x7 #people_against_dmkrowdys pic.twitter.com/FnfmCuKO6s
— Vijay Jaishwin Tamil (@vijayjaishwin) February 26, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil