நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அக்கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
ஆயுளை அதிகரிக்கும் நெல்லி… இப்படி சாப்பிட்டுப் பாருங்க!
சமீபமாக நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான முன்னணி இதழ் ஒன்றில், நாம் தமிழர் கட்சியிலிருந்து, கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. ஆனால் தான் நீக்கப்படவில்லை எனவும், தனக்கு கட்சியோடு முரண்பாடு உள்ளது உண்மை எனவும் யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கல்யாணசுந்தரம் விளக்கமளித்தார்.
இதற்கிடையே வேறொரு யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி மற்றும் கல்யாண சுந்தரம் தொடர்ச்சியாக கட்சிக்காக வேலை செய்யாமல் கட்சிக்குள் தங்களுக்காக மட்டுமே பணியாற்றி வந்ததாகவும், கட்சிக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் பணியை செய்து வருவதாகவும், கட்சியை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ், திருச்சி சிவா இடையே போட்டி?
இந்நிலையில் தான் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜீவ் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக தொடர்ந்து நேரலை விவாதங்களில் பேசி வந்த ராஜீவ் காந்தி விலகுவது, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இது குறித்து வேறெந்த விளக்கத்தையும் ராஜீவ்காந்தி தரவில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”