கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர். சீமான் தலைமை ஒருங்கினைப்பாராக செயல்படும் இந்த கட்சியில், அடிக்கடி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதன்பிறகு எந்த அரசியல் ஈடுபாடும் இல்லாமல் இருந்த அவர் தற்போது அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்த நான்,‘தற்போது திமுகவில் இணைந்தால் சாதிக்கலாம் என்பதை தாண்டி, மத்தியில் ஆளும் பாஜக, சிறுபான்மயினரை மதிப்பதில்லை. ஒற்றை ஆட்சி என்கிற பாஜகவை எதிர்க்க, மாநில சுயாட்சி என்று பேசுகிற திமுகவில் இணைந்துள்ளேன். சீமான் என் அண்ணன். அவருடன் எந்த கருத்து வேறுபாடு இல்லை. பாஜகவை எதிர்க்க திமுக சரியானதாக இருக்கும் என்பதால் வந்தேன் தமிழ் தேசியத்தின் நீட்சி தான் திராவிட கட்சி என்பதால் இங்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!!
அனைவருக்கும் நன்றி????????
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!!
— இராஜீவ் காந்தி Rajiv gandhi (@rajivgandhilaw) September 9, 2020
உங்கள் பேரன்பிற்கும்,
பெரும் நம்பிக்கைக்கும் என்றும் உரித்தானவனாய் இருப்பேன் அண்ணா! ????❤️ @Udhaystalin https://t.co/2ZNfQndBYH pic.twitter.com/jBb95Dujdt
— இராஜீவ் காந்தி Rajiv gandhi (@rajivgandhilaw) January 28, 2021
தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி,மாநில உரிமை,
மதச்சார்பின்மை,சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இனைத்து கொண்டேன்! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DrSenthil_MDRD pic.twitter.com/VvhN3gaWIH
— இராஜீவ் காந்தி Rajiv gandhi (@rajivgandhilaw) January 28, 2021
வியனரசு :
ஏற்கனவே இக்கட்சியில் மாநில ஒருங்கினைப்பாளராக செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வியனரசு, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி சார்பில் இந்த நீக்கத்துக்கான காரணமாக தெரிவிக்கப்படாத நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரடியாக போராட வராமல், ஓடி ஒளிந்துகொண்டதால், ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கிக்கொண்டதாக மக்கள் நினைப்பார்கள் என்று தான் கடிதம் எழுதியதாகவும், அந்த கடித்திற்கு நேரடியாக அழைத்து விசாரணை செய்யாமல், என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர் என்று வியனரசு தெரிவித்திருந்தார்.
கல்யாணசுந்தரம் :
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம், தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், இந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியில் அடிப்படை உறுப்பினர் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கல்யாணசுந்தரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 21-ந் தேதி அதிமுகவில் இணைந்தார்.
செ.அரவிந்தன்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த செ.அரவிந்தன் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செ.முகைதீன்
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, பொறுப்பாளர் செ.முகைதீன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செசெயல்ட்டதால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அடிப்பட்டை உறுப்பினர் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்னும் ஒரு சில உறுப்பினர்கள் திடீர் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியில் என்ன நடக்கிறது என்பது தொண்டர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் கட்சி கொள்கைக்கு எதிரான செயல்பட்டதாக கூறி நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.