'அப்பா மணிவண்ணன் செருப்பு என்னிடம் இருக்கிறது; அதாலேயே அடிப்பேன்!' சீமான் கொந்தளிப்பு

"தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.

"தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
NTK Leader Seeman accused Veera savarker was a subservent of whites

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

Advertisment

சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழரின் கோரிக்கை.

சமூகநீதி பேசுகிற பெரியார் மண் என பேசும் இவர் எடுக்க மறுப்பது ஏன்? பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நித்தீஷ்குமார் எடுக்கிறார். எது உண்மையான சமூக நீதி? நீத்திஷ் குமார் எடுக்கிறார், நீங்கள் எடுக்க தயங்குவது ஏன். எங்களை  வஞ்சித்தது தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர்.

தேவேந்திரர் எவ்வளவு என எண்ணிக்கை நடத்தி பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்.

Advertisment
Advertisements

ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளா மோடி என்ன செய்தார்.

ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை. இந்துவும் இல்லை. வரலாற்றை படிக்க வேண்டும். அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் என வரலாற்று குறிப்பில் அவர் சைவ மரபினர் என்று தான் உள்ளது. எனவே நாங்கள் வீர சைவர்கள் தான் எங்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள், வள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.

குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள், இல்லையென்றால் சமூக நீதி பற்றி பேசுவதை விடுங்கள். யாரையும் ஏமாற்ற மாட்டோம் யாரிடமும் ஏமாற மாட்டோம். பீகார் எந்த வழியை பின்பறியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.

ஈடு இணையற்ற சாதனை புரிந்த இசைஞானி இளையராஜாவுக்கு, தலித் அடிப்படையில்  எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக செல்கின்றனர். அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: