/tamil-ie/media/media_files/uploads/2023/05/seeman-3.webp)
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.
அவர்களின் ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் இது தொடர்பான காரணங்கள் வெளியாகவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Seeman-Twitter-official.png)
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மீது விமர்சனம், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு என நாம் தமிழர் கட்சியினர் தொடர் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் வைத்து வந்தனர்.
எனினும் அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கத்துக்கு அதிகாரப்பூர்வமாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகளின் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவத்துக்கு கட்சித் தொண்டர்கள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.