நாகை எம்.பி செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார். இந்திய கம்யூனினிஸ்ட் கட்சி நிர்வாகி குழு உறுப்பினரான நாகை செல்வராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.
திருவரூர் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜ், 1989 முதல் தொடர்ச்சியாக 7 முறை நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். மறைந்த செல்வராஜ் எம்.பி-யின் இறுதி சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“