ஆட்டைத் திருடி தான் விருந்து வைக்கனுமா? என்னது இது ஊராட்சி தலைவரே?

இரண்டு ஆடுகளுக்கும் உரிய ரூ. 8 ஆயிரம் பணத்தை பழனிக்கு திருப்பி கொடுத்துள்ளார் கவி முருகன்.

Nagai news : former village president stole goats for non-veg feast
Nagai news : former village president stole goats for non-veg feast

Nagai news : former village president stole goats for non-veg feast :  நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அமைந்துள்ளது விளாகம் என்ற கிராமம். இப்பகுதியில் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருபவர் பழனி. இவரது பண தேவைக்காக ஆடுகளை வளர்த்து வருகிறார். சமீபத்தில் இவரது கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகளில் இரண்டை காணவில்லை.

அதே நாளில் விளாகம் பகுதியில் இரண்டு முறை ஊராட்சி தலைவராக பணியாற்றிய கவிமுருகன் தன்னுடைய வீட்டில் ஆட்டுக்கறி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தினை நடத்த ஆடுகளை பழனியின் கொட்டகையில் இருந்து திருடியுள்ளனர் அவருடைய நண்பர்கள்.

பழனியின் கொட்டகையில் இருந்து திருடப்பட்ட இரண்டு ஆடுகளில் ஒன்று விருந்துக்காக கறியாக்கப்பட்டது என்றும் மற்றொன்று மது மற்றும் இதர மளிகைப் பொருட்கள் வாங்க விற்கப்பட்டுள்ளது என்றும் பழனியிடம் யாரோ கூற, இதனை பெரம்பூர் காவல்நிலையத்தில் புகாராக அறிவித்துள்ளார்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆடுகள் திருடப்பட்டு தான் விருந்து நடத்தப்பட்டது என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் கவிமுருகனை கடுமையாக கண்டித்துள்ளனர். இரண்டு ஆடுகளுக்கும் உரிய ரூ. 8 ஆயிரம் பணத்தை பழனிக்கு திருப்பி கொடுத்துள்ளார் கவி முருகன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nagai news former village president stole goats for non veg feast

Next Story
ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஜூலை 15க்குள் வழிகாட்டு நெறிகள் – மத்திய அரசுonline classes, central government about online classes, madras high court, மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள், சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com