/indian-express-tamil/media/media_files/bsnkYRheWgOkrLp7Jmcm.jpeg)
நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கப்பல் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர, மொத்தம் ஆறு நாட்கள் இயக்கப்படும்.
இந்த சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்ததன் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. சேவையை சுபம் நிறுவனம் இயக்குகின்றது, மேலும் ‘சிவகங்கை’ என்ற கப்பல் இந்த பாதையில் பயணிக்கிறது. கடந்த சில நாட்களாக இயற்கை காரணங்களால் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்படுகிறது.
கப்பல் சேவையின் சிறப்பம்சங்கள்:
பயண சேவை நேரம்:
காலை: நாகை - இலங்கை காங்கேசன்துறை
மதியம்: காங்கேசன்துறை - நாகை
மாலையில் கப்பல் பயணம் முடியும்.
பயணிகளுக்கான வசதிகள்:
காலை பயணிகளுக்கு இலவச காலை உணவு.
மதிய பயணிகளுக்கு இலவச மதிய உணவு.
விமான சேவையைப் போல உயர்தர உணவுகள் வழங்கப்படும்.
பயணத்தின்போது கறவைப் பால் அடிப்படையில் தேநீர் வழங்கப்படும்.
பயணிகள் விரும்பும் உணவுகளை ஆர்டரின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
சுமைகள் & முன்பதிவு:
பயணிகள் 50 முதல் 60 கிலோ வரையிலான சுமைகளை கொண்டுசெல்ல அனுமதி.
முன்பதிவு வசதி சுபம் செயில் இணையதளத்தில் (Subham Seil Website) கிடைக்கும்.
சுற்றுலா மற்றும் ஆன்மீக பயண ஏற்பாடுகள்:
சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்திரிகர்களுக்காக பேக்கேஜ் அடிப்படையில் சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயணிகள் கடலில் பாக் ஜலசந்தி வழியாக செல்லும் அழகிய பயண அனுபவத்தை உணரலாம்.
இந்த புதிய முயற்சி இந்தியா – இலங்கை மக்கள் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பயணத்திற்கான முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.