நாகை மக்களவை தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் ( தனி), நன்னிலம் ( தனி) , வேதாரண்யம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.
.
நாகை பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க 4 முறையும், அ.தி.மு.க 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில், 8 வேட்பாளர்கள் கட்சி சார்ந்தும், 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். இதில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு 5,22,892 வாக்குகளை 2019 தேதலில் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வை சேர்ந்த சரவணன் 3,11,539 வாக்குகளை பெற்றார். அ.ம.மு.க கட்சியை சேர்ந்த செங்கொடி 70,307 வாக்குகளை பெற்றார். இந்நிலையில் இந்த முறை சி.பி.ஐ கட்சிக்கு நாகை தொகுதியை தி.மு.க ஒதுக்கி உள்ளது குறிப்பிடதக்கது.