நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38வது மாவட்டமாக திகழும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38வது மாவட்டமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு! கும்பகோணம் மிஸ்ஸானது எப்படி?
திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களுக்கு செல்ல முக்கிய இணைப்பு புள்ளியாக இருக்கிறது மயிலாடுதுறை. மயிலாடுதுறை நகராட்சி ஏற்கனவே தங்களுக்கு தனி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட தேவைகள் குறித்து அடிக்கடி கோரிக்க வைத்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார் முதல்வர். முதல்வரின் இந்த முடிவினை மயிலாடுதுறைவாசிகள் வரவேற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என பிரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என்று பிரித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டமும் உதயமாகியுள்ளது.