Nagapattinam farmer gave back Rs 1.3 lakhs to collector : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்துள்ளது பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமம். அங்கே விவசாயம் செய்து வருகிறார் தட்சிணாமூர்த்தி என்பவர். சமீபத்தில் இவருடைய வயலில் விளைந்த நெல்லை அங்கிருக்கும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தை தட்சிணாமூர்த்தியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தது நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
Advertisment
ஆனால் தட்சிணாமூர்த்தியின் நெல்லுக்கான பணத்தைக்காட்டிலும் ரூ.1,32,042 அதிகமாக அவரது வங்கிக் கணக்கில் நெல் கொள்முதல் நிலையத்தார் தவறுதலாக பணத்தை வரவு வைத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி, அந்த பணத்தை அப்படியே, நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்திருக்கிறார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் அதிகரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே நாயரிடம் நேரடியாக பணத்தை திருப்பி ஒப்படைத்த தட்சிணாமூர்த்தி, “நம்முடைய உழைப்பில் கிடைத்த பணமே சில நேரம் நம் கையில் தங்குவதில்லை. அரசின் பணமானால் என்ன, அடுத்தவர்கள் பணமானால் என்ன, அது நமக்கு தேவையில்லாத ஒன்று. அதனால் தான் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.