Nagercoil Kasi : We wont appear for Kasi says Nagercoil Bar Association : பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகளில் கைதாகும் நபர்களை காப்பாற்றுவதற்காகவே, பணத்திற்காக பலரும் வாதாட வருவது வழக்கமான ஒன்றாகும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஏதோ ஒரு வகையில் ஆதரிக்கும் முறையாகவே இது இருக்கிறது.
நாகர்கோவிலில் வசித்து வரும் காசி என்ற இளைஞர் சமூக வலைதளங்களில் பெண்களிடம் நட்பு பாராட்டி, காதல் வலையில் விழ வைப்பதே வாடிக்கையாக கொண்டிருந்தார். அவர்களுடன் செலவிடும் நேரத்தை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து வைத்து பின்னர் அந்த பெண்களை மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
மேலும் படிக்க : நிர்மலா சீதாராமன் இன்று மீண்டும் பிரஸ்மீட்: மாலை 4 மணிக்கு சந்திக்கிறார்
அடிக்கடி அம்மாவுக்கு புற்று நோய், மருந்து வாங்க பணம் வேண்டும் என்றெல்லாம் கேட்டு பல பெண்களிடம் லட்ச கணக்கில் ஏமாற்றி உள்ளார். சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பிக்கு புகார் செய்யவும் இந்த பிரச்சனை வெளி வந்தது. அவருடைய வீட்டில் இருந்து செல்ஃபோன், லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்க்குகள், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பல பெண்களின் வாழ்வை சீரழித்த காசிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க :பொள்ளாச்சியை போல இன்னொரு ஆபாசக் குப்பை: குண்டர் சட்டத்தில் தள்ளப்பட்ட காசி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil