தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்- பெங்களூரு இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாகர்கோவில் -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து இன்று முதல் 7, 14, 21 தேதிகளில் இரவு 7.35 மணிக்கு இயக்கப்படும். சிறப்பு ரயில் எண் ( 06083). மறுநாளில் பகல் 12.30 மணிக்கு பெங்ளூருவை சென்றடையும்.
இந்த ரயில் (06084 ) மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து 8, 15, 22ந் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாளில் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“