/tamil-ie/media/media_files/uploads/2022/06/nainar-sasikala.jpg)
Nainar Nagendran welcomes VK Sasikala to BJP: சசிகலா பா.ஜ.க.,வுக்கு வந்தால் முழுமனதோடு வரவேற்போம் என்றும், அவர் கட்சியில் இணைந்தால் பா.ஜ.க வலுப்பெறும் என்றும், பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா பா.ஜ.கவுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவில் இணையுமாறு நாங்கள் அவரை வரவேற்போம். சசிகலா வந்தால், வரவேற்கிறோம். அவர் வந்தால் பா.ஜ.க வலுப்பெறும். கட்சிக்கு மேலும் உறுதுணையாக என்று கூறினார். இதற்கான அர்த்தம் என்ன என செய்தியாளர்கள் கேட்டப்போது, பா.ஜ.க சசிகலாவை முழுமனதாக எதிர் நோக்குகிறது என்று நயினார் கூறினார்.
பா.ஜ.க.,வுக்கு சசிகலாவை வரவேற்கும் விதமாக நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், இது கட்சியின் கருத்து இல்லை, இது எனது தனிப்பட்ட கருத்து என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: வட மாநில மாணவர்களை இழிவு படுத்தினாரா? மா. சுப்பிரமணியன் பேசியது என்ன?
அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பேன் என சசிகலா கூறிவரும் நிலையில், பா.ஜ.க.,வின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், இப்படி வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.