நளினியை நேரில் ஆஜர் படுத்த முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!

காணொளி காட்சி மூலம் ஆஜராக அவருக்கு விருப்பமா?

Nalini parole case : ஆறு மாதம் பரோல் கோரிய மனுவின் விசாரணைக்கு பாதுகாப்பு காரணங்களால் நளினியை நேரில் ஆஜார் படுத்த முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்பட வில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார்.

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட , ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தன் தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ரா வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டுமென வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் தான் அளித்த மனு நிலுவையில் உள்ளதாகவும்,
அதேபோல தன் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றம் இதில் தலையிட்டு தனக்கு ஆறுமாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறை துறைக்கும் உத்தரவிடுமாறும் அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் வாதிட மனுதரார்க்கு உரிமை உள்ளது என தெரிவித்தனர். மேலும் நேரில் ஆஜராகுவதில் என்ன பிரச்சினை உள்ளது பாதுகாப்பு பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசிடம் பதிலை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக வழக்கு விசாரணையின் போது நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜார் படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் காணொளி காட்சி மூலமாக ஆஜார் படுத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்த அரசு வழக்கறிஞரிடம், எவ்வாறு மனுதராரை தடுக்க முடியும் எனவும் கடந்த விசாரணையின் போது இதனை தெரிவித்து இருந்த்தாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த பாதுகாப்பு பிரச்சினை என்றால் காலை விசாரணை தொடங்குவதற்கு போது அல்லது மாலை இறுதி வழக்காக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

அதற்கு அரசு வழக்கறிஞர் மனுதரார் வழக்கறிஞர் மூலமாக வாதிடலாம் எனவும் ஏற்கனவே மனுதரார் தொடர்ந்த வழக்குகள் வழக்கறிஞர் வாதிடுவதாகவும் தெரிவித்தார். நளினியை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த அழைத்து வந்தால் 25 க்கும் அதிகமாக பாதுகாவலர் தேவைப்படுவர்கள் என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் வழக்கு தொடரும் நபர் தனக்கு வழக்கறிஞர் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது அவர்களின் விரும்பும் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடருபர்கள் பலர் நேரிலும் வழக்கறிஞர் மூலமாக ஆஜராகி வாதிடுகின்றனர். எனவே இதில் மனுதரார் உரிமையை தடுக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே மனுதரார் இரண்டு முறை பரோல் பெற்று சிறையில் இருந்து வந்துள்ளார். அந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் என கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என சாடினர்.

அப்போது அரசு வழக்கறிஞர் நளினியை காணொளி காட்சியின் மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.மேலும் காணொளி காட்சி மூலம் ஆஜராக அவருக்கு விருப்பமா? எனபது தொடர்பாக மனுதரார் கருத்தை அரிய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், காணொளி காட்சி மூலம் விசாரணையில் ஆஜராக நளினி சம்மதம் உள்ளதா என்பதை அவரிடம் தெரிவித்து உரிய விளக்கத்தை பெற்று தர சிறைதுறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close