scorecardresearch

மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வந்த அமைச்சர்… மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை நலம் விசாரிக்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை வைத்து நெகிழச் செய்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு. 97 வயதாகும் நல்லகண்ணு கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். முதுமை அடைந்தாலும், மக்கள் போராட்டங்களில் நிற்பவர். அரசியலில் இன்னும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது நல்லகண்ணு தன்னை சந்திக்க வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் இடம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அரசு மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வந்த அமைச்சரிடம் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது நெகிழச் செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nallakannu public demand at minister ma subramanian

Best of Express