scorecardresearch

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’  திரைப்படம்: நல்லகண்ணு பாராட்டு

விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.

நல்லகண்ணு பாராட்டு
நல்லகண்ணு பாராட்டு

விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.

விஜய் சேதிபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படத்தை மூத்த தலைவர் நல்லகண்ணு, பட குழுவுடன் பார்த்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் மைக்கை தானே பிடித்துகொள்வதாக, நடிகர் விஜய் சேதுபதி கூறினார். நல்லகண்ணு பேசி முடிக்கும் வரை விஜய் சேதுபதி மைக்கை பிடித்துகொண்டார். இந்நிலையில் அவர் பேசியதாவது”

” யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தேன். படம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த தலைப்பை கேட்பது பெரும் மகிழ்ச்சி. நமது சங்க இலக்கியத்தில் இதுதான்  முதல் வரி. ஐக்கிய நாட்டுகள் சபை,  “ யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாசகத்தை கொண்டுள்ளது. உலகமே இதை போற்றுகிறது எனவே இது தமிழுக்கு கிடைத்த பெருமை.

படத்தின் பெயரை கேட்டவுடன், படம் பாரக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதில் விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். இந்திய நாட்டின் சமூகமே மாறியிருக்கிறது. இன்று இலங்கையில் உள்ள பிரச்சனைகளை தமிழகத்தில் பேசுகிறார்கள். தமிழத்தில் உள்ள பிரச்சனைகளை மற்ற இடங்களில் பேசுகிறார்கள். பிரிந்து இருக்கும் நாட்டை கருத்தால் மற்றும் இசையால்  ஒன்று சேர்க்க வேண்டும். இந்த கருத்தை இந்த படம் வெளிப்படுத்தி உள்ளதால், படக்குழுவை  நான் பாராட்டுகிறேன்”  என்று கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

R

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nallakannu talks positive about vijay sethupathi movie

Best of Express